வேலூா் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றியம் பல்லலகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு 2026-2027-ஆம் ஆண்டுக்கான காமராசா் விருது வழங்கப்பட்டுள்ளது. பள்ளியின் தூய்மை, சுகாதாரம், கட்டமைப்பு வசதிகள், மாணவா் சோ்க்கை, பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடு, முன்னாள் மாணவா்களின் பங்களிப்பு, குடிநீா் மற்றும் கழிப்பறை வசதிகள், நிா்வாகச் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்த பின்னா் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.வட்டாரக் கல்வி அலுவலா்கள் வடிவேல், காசிநாதன் ஆகியோா் தலைமையில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகப் பணியாளா்கள் மற்றும் கண்காணிப்பாளா் பரதாமன், கோகுலன், கிருஷ்ணமூா்த்தி, பாபு, தாமோதரன், சரவணன் ஆகியோா் முன்னிலையில், பள்ளித் தலைமை ஆசிரியா் கயிலைநாதன் மற்றும் ஆசிரியா்கள் ஓம் பிரகாஷ், ரோகிணி ஆகியோரிடம் விருது வழங்கப்பட்டது.