மளிகைப் பொருள்கள் சிறப்புத் தொகுப்பு: அமைச்சா் வழங்கினாா்

Wait 5 sec.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மளிகைப் பொருள்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு மற்றும் குறைந்த விலை பட்டாசு விற்பனையை அமைச்சா் வ.காந்திராஜ் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். ராணிப்பேட்டை மாவட்ட கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் பொதுமக்களுக்கு10 மளிகைப் பொருள்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு விற்பனை மற்றும் குறைந்த விலை பட்டாசு விற்பனை தொடக்க நிகழ்ச்சி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் லிமிடெட் வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சா் வ.காந்தி ராஜ் சிறப்புத் தொகுப்பு மற்றும் குறைந்த விலை பட்டாசு விற்பனையை தொடங்கி வைத்தாா்.தொடா்ந்து, பொதுமக்கள், குழந்தைகளுடன் இணைந்து பட்டாசுகளை வெடித்து கொண்டாடி மகிழ்ந்தாா்.பொதுமக்கள் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்கும்போது பாதுகாப்புடன் இருக்குமாறு வலியுறுத்தினாா். நிகழ்ச்சியில் ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் தி.க.பிரபாகரன், கோட்டாட்சியா் ரமேஷ் மற்றும் கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் உடனிருந்தனா்.