ஒன்பிளஸ் நிறுவனத்தில் புதிதாக டர்போ 6 விஎஸ் என்ற ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டர்போ வரிசையில் ஒன்பிளஸ் டர்போ 6, டர்போ 6வி, டர்போ 6எக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களும் அடுத்தடுத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 9,000mAh பேட்டரி திறன் மற்றும் 50 மெகா பிக்சல் கேமரா ஆகியவை டர்போ வரிசை ஸ்மார்ட்போன்களின் சிறப்புகளாக பார்க்கப்படுகின்றன. சிறப்பம்சங்கள்ஒன்பிளஸ் டர்போ 6 விஎஸ் ஸ்மார்ட்போன் 6.78 அங்குல அமோலிட் திரை கொண்டது.திரை சுமூகமாக இயங்கும் வகையில் 144Hz திறன் உடையது. திரைப் பிரகாசமாக இருக்கும் வகையில் 1,800 nits திறன் கொண்டது.குவால்கம் ஆக்டா கோர் ஸ்நாப்டிராகன் 7, 4 ஆம் தலைமுறை சிப்செட் கொண்டது.ஆன்டிராய்டு 16 அடிப்படையிலான கலர் ஓஎஸ் 16 இயங்குதளம் கொண்டது. 12 ஜிபி உள்நினைவகம், 256 ஜிபி நினைவகம் கொடுக்கப்பட்டுள்ளது.நோவா வெள்ளை மற்றும் ஆரஞ்ச் நிறங்களில் கிடைக்கின்றன. இரட்டை சிம் கார்டுகளை பயன்படுத்தலாம். 8400mAh பேட்டரி, சோனி கேமரா, 100 வாட்ஸ் சார்ஜிங்! அசத்தல் ஸ்மார்ட்போன் ஐக்யூ 16!OnePlus Turbo 6VS launched with 9,000mAh battery