அமெரிக்காவில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 பேர் பலியாகினர்.அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சிறிய ரக ஜெட் விமானம் ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகினர்.டெக்சாஸ் மாகாணம் ஆஸ்டின் நகரில் இருந்து பஹாமாஸ் தீவுக்கு சிறிய ரக ஜெட் விமானம் நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து, புளோரிடா மாகாணத்தின் வான்பரப்பில் சென்று கொண்டிருந்தபோது, விமானத்தின் கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்திலிருந்த 9 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இருப்பினும், விமானம் விழுந்த பகுதியில் தரையில் இருந்த யாருக்கும் உயிர் சேதம் ஏற்பட்டதா என்ற தகவல்கள் வெளியாகவில்லை.Nine people were killed when a small aircraft crashed in the United States.