சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இஷான் கிஷன் புதிய சாதனை!

Wait 5 sec.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய வீரர் இஷான் கிஷன் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் இன்றுடன் நிறைவடைந்தது.ஹாமில்டனில் இன்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதன் மூலம், நியூசிலாந்து அணி டி20 தொடரை 2-3 என்ற கணக்கில் நிறைவு செய்தது.2⃣0⃣0⃣0⃣ T20I runs unlocked ✅Ishan Kishan continues his merry way Updates ▶️ https://t.co/B5TqF9MWu4#TeamIndia | #NZvIND | @ishankishan51 pic.twitter.com/XpmxfKtrcP— BCCI (@BCCI) November 1, 2026இன்றையப் போட்டியில் இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன், 32 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். இன்றையப் போட்டியில் 61 ரன்கள் எடுத்ததன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் 2000 ரன்களைக் கடந்து இஷான் கிஷன் சாதனை படைத்துள்ளார்.இதுவரை இந்திய அணிக்காக 69 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இஷான் கிஷன், 2016 ரன்கள் எடுத்துள்ளார். அதில் ஒரு சதம் மற்றும் 14 அரைசதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 103.Indian player Ishan Kishan has set a new record in international T20 cricket.என்னுடைய வேலை சரியான முடிவுகளை எடுப்பது, அனைவரும் விரும்பும் முடிவை எடுப்பதல்ல: கௌதம் கம்பீர்