ஸ்கேம் 2010 புதிய தொடர் அறிவிப்பு! இம்முறை இவரா?

Wait 5 sec.

ஹன்சல் மேத்தா இயக்கிவரும் ஸ்கேம் தொடரின் புதிய சீசன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கேம் 1992, ஸ்கேம் 2003 ஆகிய தொடர்களை இயக்கியவர் ஹன்சல் மேத்தா. முதல் ஸ்கேமில் நாட்டையே உலுக்கிய பிரபல பங்குச்சந்தை தரகர் ஹர்ஷத் மேத்தாவின் கதை கூறப்பட்டிருந்தது. தொடர்ந்து வெளியான ஸ்கேம் 2003-ல் போலி முத்திரைத்தாள் தயாரித்து விற்பனை செய்ததன் மூலம் ரூ. 30 ஆயிரம் கோடி வரை மோசடி செய்த அப்துல் கரீம் தெல்கியின் வாழ்க்கையைப் பதிவு செய்தனர். தற்போது, ஹன்சல் மேத்தா இயக்கத்தில் ஸ்கேம் 2010 என்கிற தொடர் உருவாகியுள்ளது. இதில், மறைந்த தொழிலதிபர் சுப்ரதா ராய் (Subrata Roy) கதையைக் கூறியுள்ளனர். பிரபலமான தொழிலதிபரான இவர் இந்தியாவின் மிகப்பெரிய வணிகக் குழுமங்களில் ஒன்றாக விளங்கிய சஹாரா குழுமத்தின் (Sahara Group) நிறுவனர் மற்றும் தலைவராக அறியப்பட்டவர்.Pranaam SCAM is back!And this time, it’s more than just about the money.SCAM 2010Streaming this January on Sony LIV.Produced by Birla Studios & Applause EntertainmentDirected by Hansal Mehta#Scam2010 #Scam2010TheSubrataRoySaga #TheSaharaSaga #SonyLIV #HansalMehta https://t.co/WcaETU2JqK— Sony LIV (@SonyLIV) November 2, 2026 சஹாரா நிறுவனத்தின் இரண்டு நிறுவனங்கள் விதிமுறைகளுக்கு முரணான பத்திரங்கள் மூலம் முதலீட்டாளர்களிடமிருந்து பெருமளவு பணம் திரட்டியதாக இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான SEBI வழக்குத் தொடர்ந்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி முதலீட்டாளர்களுக்குப் பணத்தைத் திருப்பிச் செலுத்த வேண்டிய விவகாரத்தில், 2014-ல் சுப்ரதா ராய் சிறையில் அடைக்கப்பட்டார். 2016-ல் பிணையில் வெளியே வந்தார். பின், 2023 ஆம் ஆண்டு காலமானார். தற்போது, இந்த விவகாரத்தை வைத்து ஸ்கேம் 2010 தொடர் உருவாகியுள்ளது. சுப்ரதா ராயாக நடிகர் சித்தார்த் போத்கே நடித்துள்ளார். இது சோனி லைவ் ஓடிடியில் வருகிற ஜனவரி மாதம் வெளியாகிறது. டேர் டெவில் பூஜை... கலந்துகொள்ளாத அஜித்! A new season of the 'Scam' series, directed by Hansal Mehta, has been announced.