முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசிய விவகாரத்தில் வழக்கு விசாரணைக்காக திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆஜரானார்.சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவமதிக்கும் வகையில் பேசியதாக முதல்வர் விஜய்க்கு எதிராக திமுகவினர் செப். 12-ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதனிடையே, சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசியதாக திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரி புகார் தெரிவித்தார்.இதனையடுத்து, வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுதல், ஆபாசமாக பேசுதல், மிரட்டல் விடுத்தல், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் உள்பட 6 பிரிவுகளின்கீழ் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.இந்த நிலையில், விசாரணைக்காக தன்னுடைய வழக்குரைஞர்களுடன் சேகர்பாபு நேரில் ஆஜரானார்.முதல்வர் விஜய் ஏன் அஜித்தை சந்தித்தார்? இபிஎஸ் சொல்லும் குட்டி ஸ்டோரி!DMK Former Minister Sekarbabu appears in person for questioning in the case of defaming CM Vijay