கிரைம் திரில்லர் கதையில் பிரேம்ஜி அமரன் முதன்மை வேடத்தில் நடிப்பதோடு இசையும் அமைக்கிறார்.'வல்லமை', 'நரி வேட்டை' உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றிய கணேஷ்குமார், அபிராமி புரொடக்ஷன்ஸ் பேனரில் லாவண்யா அபிராமி தயாரிக்கும் புதிய படத்தின் வாயிலாக இயக்குநராக அறிமுகமாகிறார்.போஸ் வெங்கட், சஸ்திக், நயனா சாய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் வேகமாக வளர்ந்து தற்போது படப்பிடிப்பின் இறுதி கட்டத்தில் உள்ளது.