டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் சுமார் 92,000 பேர் தேர்வுக்கு வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.டிஎன்பிஎஸ்சி குரூப் - 2, 2 ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு இன்று (நவ. 1) மாநிலம் முழுவதும் 1,647 தேர்வு மையங்களில் நடைபெற்றது. காலை 9 மணிக்குத் தொடங்கி நண்பகல் 12.30 மணி வரை நடைபெற்றது.காலியாகவுள்ள 846 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் இந்த முதல்நிலைத் தேர்வுக்கு 4,89,885 பேர் விண்ணப்பித்தனர். 846 பணியிடத்துக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்திருக்கும் நிலையில், ஒரு பணியிடத்துக்கு சராசரியாக 579 பேர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.இருப்பினும், இன்று நடைபெற்ற தேர்வுக்கு 92,595 பேர் வராத நிலையில், 3,97,293 பேர் தேர்வு எழுதினர்.தலைமைச் செயலகத்தில் தமிழ்ச் சங்கம்! தலைவராக முதல்வர் இருப்பார்: அமைச்சர் ராஜ்மோகன்92,000 candidates who applied for the TNPSC Group-2 and 2A preliminary examination remained absent