ஜெயிலர் 2-ல் மோகன்லால் காட்சிகள் நீக்கப்பட்டது வருத்தமளிக்கிறது: ஆண்டனி பெரும்பாவூர்

Wait 5 sec.

ஜெயிலர் - 2 திரைப்படத்தில் நடிகர் மோகன்லாலின் காட்சிகளை நீக்கியது வருத்தமளிப்பதாக ஆண்டனி பெரும்பாவூர் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் - 2 திரைப்படம் உலக அளவில் ரூ. 775 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், தமிழில் மட்டும் இப்படம் ரூ. 310 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாம்.மேலும், தெலுங்கில் ரூ. 82 கோடி, கேரளத்தில் ரூ. 75 கோடி, ஹிந்தியில் ரூ. 47 கோடி, கன்னடத்தில் ரூ. 7 கோடி என வசூலித்துள்ளதகாவும் கூறப்படுகிறது. இதனால், இந்தியாவிலேயே இப்படம் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தச் சாதனையைச் செய்த முதல் தமிழ்த் திரைப்படம் என்கிற பெயரையும் ஜெயிலர் - 2 திரைப்படம் பெற்றுள்ளது.இத்திரைப்படம் வெளியான நாள் முதல் ரசிகர்கள் கொண்டாட்டமாக இருந்தாலும் நடிகர் மோகன்லாலை வைத்து நிறைய காட்சிகளை எடுத்துவிட்டு படத்தில் ஓரிரு நிமிடங்கள் வரும்படியே வைத்தது மலையாள ரசிகர்களிடம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மோகன்லாலின் நீண்ட கால உதவியாளரும் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்தைக் கவனித்துவரும் ஆண்டனி பெரும்பாவூர், “ஜெயிலர் - 2 திரைப்படத்தின் டிரைலரில் மோகன்லாலுக்கான காட்சிகள் இருந்த அளவிற்கு கூட திரைப்படத்தில் காட்சிகள் இல்லாதது பெரிய வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இது ஏமாற்றமாகவும் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இதனால், ஜெயிலர் - 2 திரைப்படத்திலிருந்து மோகன்லாலுக்கான காட்சிகளை நீக்கியது குறித்து அவருக்கே சொல்லப்படவில்லை என்றே தெரிகிறது. என் பொண்டாட்டி இல்லையென்றால்... உருக்கமாகப் பேசிய சூர்யா!Producer Antony Perumbavoor has stated that the removal of actor Mohanlal's scenes is regrettable.