புதுதில்லி: கேஷுவல் மற்றும் டெனிம் பிரிவில் முன்னணி நிறுவனமான அரவிந்த் ஃபேஷன்ஸ் லிமிடெட், செப்டம்பர் முடிய வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 19.44 சதவீதம் உயர்ந்து ரூ. 67.62 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது. கடந்த ஆண்டு நிறுவனம் ரூ. 56.61 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்தது.செயல்பாடுகள் மூலம் நிறுவனம் ஈட்டிய வருவாய் 9.96 சதவீதம் அதிகரித்து ரூ. 1,558.83 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்ட்டதில் இது ரூ. 1,417.51 கோடியாக இருந்தது.செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த செலவு 9.77 சதவீதம் அதிகரித்து ரூ. 1,474.43 கோடியாக உள்ளது. பிற வருமானத்தையும் உள்ளடக்கிய அதன் மொத்த வருமானம், நிதியாண்டிமன் செப்டம்பர் வரையான காலாண்டில் அது 9.4 சதவீதம் உயர்ந்து ரூ. 1,565.82 கோடியாக இருந்தது.நிதியாண்டின் முதல் பாதியில், அரவிந்த் ஃபேஷன்ஸின் மொத்த ஒருங்கிணைந்த வருமானம் 11.7 சதவீதம் அதிகரித்து ரூ. 2,851.33 கோடியாக இருந்தது.Arvind Fashions Ltd, reported a 19.44 per cent rise in consolidated net profit to Rs 67.62 crore for the September quarter.ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் Q2 லாபம் 13.7% அதிகரிப்பு!