ஹோர்முஸ் நீரிணை இரு நாள்களில் திறக்கப்படும்... ஆனால்? ஈரான் நிபந்தனை!

Wait 5 sec.

ஈரானின் நிபந்தனைகளுக்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டால் ஹோர்முஸ் நீரிணையை இரு நாள்களில் திறப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் மீண்டும் தொடங்குவதைத் தடுக்க மத்தியஸ்தம் செய்யும் நாடுகள் மேற்கொண்ட தீவிர முயற்சிகளைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கான முன்மொழிவை ஈரான் வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இது நம்பிக்கை அளிக்கும் விதமாக இருப்பதாக ஈரான் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பிப்ரவரி மாதம் போர் தொடங்கியது முதலே ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டது. இதனால், உலகளவில் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், டிரம்ப்புக்கு தேர்தல் நேரத்தில் இது சவாலையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்மாயில் பாகாயி செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “ஈரானின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பை மீட்டெடுத்து, குறுகிய காலத்திற்குள் பேச்சுவார்த்தை செயல்முறையை மீண்டும் தொடங்க முடியும் என்று நாங்கள் தெரிவித்துள்ளோம். நிபந்தனைகளுக்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டால் இரு நாள்களில் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும். இரு நாள்களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் சாத்தியம், ஈரானின் நல்லவிதமான அணுகுமுறையின் அறிகுறியாகும்” என அவர் தெரிவித்துள்ளார். தற்போது மத்தியஸ்த நாடுகளின் மூலம் அமெரிக்காவுடன் தகவல்கள் பகிரப்பட்டு வரும் நிலையில், ஈரானின் கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்வதைப் பொறுத்தே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி விவாதிக்க முடியும் என பாகாயி கூறியுள்ளார். கடந்த செப்டம்பரில், பிராந்தியத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது, ஈரானின் சொத்துக்களை விடுவிப்பது, ஈரானின் எண்ணெய் மீதான தடைகளை நீக்குவது மற்றும் ஈரானின் துறைமுகங்கள் மீதான முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வருவது போன்ற கோரிக்கைகளுக்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டால் ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கான 7 நாள் திட்டத்தை ஈரான் முன்மொழிந்தது. அமெரிக்காவில் கடந்த வாரம் நடைபெற்ற இடைத்தேர்தல் இறுதிப் பேரணியில் பேசிய டிரம்ப், “நான் ஈரானுடனான உறவை இன்னும் கைவிடாததற்கு ஒரே காரணம், நான் நல்லவனாக இருக்க விரும்புகிறேன். என்னால் முடிந்த அளவு அங்குள்ளா உயிர்களைக் காப்பாற்ற முயற்சிக்க விரும்புகிறேன். ஆனால் ஒரு கட்டத்தில் நாம் அவர்களுக்கு கடுமையான எதிர்த் தாக்குதலைக் கொடுக்க வேண்டியிருக்கும்" என்று எச்சரிக்கும் விதமாகப் பேசியது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து: 9 பேர் பலி!Iran has stated that it will open the Strait of Hormuz within two days if the United States agrees to its conditions.