நடிகர் சூர்யா தன் மனைவி ஜோதிகா குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். நடிகர்கள் சூர்யா, நஸ்ரியா, நஸ்லன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான சீன் திரைப்படம் நவ. 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் சீன் நன்றாக இருந்தால் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டிரைலர் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சூர்யா, "அப்பா, அம்மா, தம்பி, தங்கை அமைந்ததை என்னால் முடிவு செய்ய முடியாது. அந்த வீட்டில் பிறந்தேன்; அவர்களுடன் இருந்தேன். ஆனால், மனைவி அமைவதெல்லாம் எனச் சொல்வார்களே... என்னை வழிநடத்துவது என் பொண்டாட்டிதான். நிறைய தவறுகளைச் செய்து கீழே விழுந்திருக்கிறேன். அதனைச் சுட்டிக்காட்டி என்னை சரி செய்ததாக இருகட்டும்; நான் சரியாக இருப்பதாக நடப்பதாகட்டும் எல்லா நேரமும் என் கையைப் பிடித்து அழைத்துச் செல்வது என் ஜோதான். மிகச்சிறந்த மனைவி, அருமையான தாய், நல்ல தோழி என நான் இப்படியான ஒரு ஆளாக இருப்பதற்கான எல்லா விஷயங்களும் என் மனைவியால்தான் நடந்தது” எனத் தெரிவித்தார். நடிகர் கார்த்தி பேசியபோது, “அண்ணனுக்கும் அண்ணிக்கும் மீண்டும் திருமண நிகழ்வு நடைபெற்ற போது எனக்கும் மனைவிக்கும் சண்டையே வந்துவிட்டது. அங்கு வந்திருந்த பலருக்கும் இதான் நிலைமை. இவர்கள் இருவரும் (சூர்யா, ஜோதிகா) ஓவராக காதலிக்கிறார்கள். இவர்கள் எப்படி காதலிக்கிறார்கள் பார் என பல குடும்பங்களில் சரியாக உணவுகூட கிடைப்பது இல்லையாம்” என நகைச்சுவையாகக் கூறியதும் வைரலாகி வருகிறது. ஒரே நாளில் 6 பாடல்களை உருவாக்கிய இளையராஜா! Actor Suriya has spoken movingly about his wife, Jyothika.