பவர் டிரேடிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லாபம் 28% சரிவு!

Wait 5 sec.

புதுதில்லி: அதிகரித்த செலவினங்கள் காரணமாக, செப்டம்பர் வரையான காலாண்டில், பவர் டிரேடிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (பிடிசி) நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 28% மேல் சரிந்து ரூ.159.10 கோடியாக குறைந்துள்ளதாக நிறுவனம் இன்று அறிவித்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டில் நிறுவனம் ரூ.222.05 கோடி நிகர லாபம் ஈட்டியது.இருப்பினும், நிதியாண்டின் 2வது காலாண்டில், நிறுவனத்தின் மொத்த வருமானம், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்திலிருந்த ரூ.5,585.21 கோடியிலிருந்து ரூ.5,958.24 கோடியாக அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் ரூ.5,287.25 கோடியாக இருந்த நிறுவனத்தின் மொத்த செலவு, நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.5,788.97 கோடியாக அதிகரித்துள்ளது.பிடிசி இந்தியா வெளியிட்ட அறிக்கையில், நிதியாண்டின் 2வது காலாண்டில், அதன் மின்சார வர்த்தக அளவு 24% அதிகரித்து 32.46 பில்லியன் யூனிட்டுகளாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தது.PTC India posted a more than 28 per cent fall in consolidated net profit.வோக்ஹார்ட் லாபம் 11% சரிவு!