கோவை மத்திய சிறையிலிருந்து தப்பிய கைதி இன்று மீண்டும் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டத்தின் கோபாலபுரம் பகுதியில் மத்திய சிறை அமைந்துள்ளது. இந்தச் சிறையிலிருந்து கைதி ராகவன் என்பவர் அக். 30 அன்று இரவு தப்பியோடினார்.ஈரோட்டைச் சேர்ந்த ராகவன் மீது வழிப்பறிக் கொள்ளை தொடர்பான வழக்குகள் இருந்துள்ளன. அன்னூர் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட வழிப்பறி வழக்கு ஒன்றில் கைதான இவர், அக். 30 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.பின்னர் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ராகவன், சிறையில் சோதனைக்காக காக்க வைக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.சிறை வளாகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலீஸார் தேடிய நிலையில், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.இதுதொடர்பாக, அன்னூர் காவல்துறையினர் ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.பொதுவாக சிறை வளாகம் மற்றும் நுழைவுவாயிலில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாக இருக்கும் நிலையில் கைதி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் சிறைத்துறை சார்பில் பொது மக்களுக்காக இயங்கி வந்த பெட்ரோல் பங்க், உணவகம், இறைச்சிக் கடைகள் மூடபட்டது. தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிரமாக கைதி ராகவனைத் தேடிவந்த நிலையில், சத்தியமங்கலம் அருகே அவர் இன்று கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆந்திரத்துக்குச் செல்லும் தமிழக தொழில் முதலீடுகள்! இபிஎஸ் குற்றச்சாட்டுA prisoner who escaped from the Coimbatore Central Prison was re-arrested today.