வோக்ஹார்ட் லாபம் 11% சரிவு!

Wait 5 sec.

புதுதில்லி: முன்னணி மருந்து நிறுவனமான வோக்ஹார்ட் லிமிடெட், செப்டம்பர் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் கிட்டத்தட்ட 11 சதவீதம் சரிந்து ரூ.73 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், நிறுவனம் வரிக்குப் பிந்தைய லாபமாக ரூ.82 கோடியை ஈட்டியிருந்தது.நிதியாண்டின் 2வது காலாண்டில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த செயல்பாட்டு வருவாய் ரூ.969 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ரூ.782 கோடியாக இருந்தது.மதிப்பாய்வுக்குட்பட்ட காலாண்டில், நிறுவனத்தின் மொத்த செலவுகள் கடந்த ஆண்டு ரூ.712 கோடியாக இருந்த நிலையில், நடப்பு காலாண்டில் இது ரூ.907 கோடியாக அதிகரித்துள்ளது.நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.180 கோடியாக உயர்ந்துள்ள நிலையில் கடந்த ஆண்டின் முதல் பாதி காலகட்டத்தில் நிறுவனம் ரூ.26 கோடி நிகர இழப்பை சந்தித்தது.Wockhardt Ltd on Monday reported a nearly 11 per cent decline in consolidated net profit.அரவிந்த் ஃபேஷன்ஸின் Q2 லாபம் 19.4% அதிகரிப்பு!