தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க புதிதாக 26 சிறப்பு நீதிமன்றங்களும், போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்க 4 சிறப்பு நீதிமன்றங்களும் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசு பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன் செயல்களை தடுக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆரம்பத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டது. தற்போது குழந்தைகள் பெண்கள் மீதான பாலியல் வன்செயல்கள் தடுப்பது குறித்து தீவிர ஆய்வு செய்து, இது தொடர்பான வழக்குகளை விசாரிக்க தற்போது 22 நீதிமன்றங்கள் செயல்பட்டு வரும் நிலையில், மேலும் 12 சிறப்பு நீதிமன்றங்கள், 14 கூடுதல் சிறப்பு நீதிமன்றங்கள் என புதிதாக 26 நீதிமன்றங்கள் அமைக்க முதல்வர் உத்தரவிட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது. இதன் மூலம் நீதிமன்றங்களின் விசாரணையில் இருந்து வரும் 18 ஆயிரத்து 733 வழக்குகள் மீது விரைந்து நீதி வழங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளை விசாரிக்க சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் ஆகிய நான்கு மையங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பதும் நல்ல நடவடிக்கையாகும்.குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுப்பதில் காவல் துறையின் நடவடிக்கை மிக முக்கியமானது என்பதை கருத்தில் கொண்டு, வழக்குகளை பதிவு செய்வதிலும், விசாரிப்பதிலும், குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடாமல் சாட்சியங்கள் மற்றும் ஆவண காட்சியங்களை கண்டறிந்து உறுதி செய்வதிலும் காவல்துறையின் நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. அது தொடர்பாகவும் முதல்வர், தனி ஆய்வு செய்து சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். Tamil Nadu CPI welcomed govt setting up 26 new courts for crimes against women and children, aiding 18,733 pending casesதனியாரிடம் கமிஷன் டீல் பேசுகிறாரா அமைச்சர் கலெக்சன் குமார்? - முன்னாள் அமைச்சர் ரகுபதி அறிக்கை