கோவை: ஆறு மாத காலத்தில் ஆதரவை வாபஸ் பெறுவது எப்படி ஜனநாயகம் ஆகும். நாங்கள் ஆதரவு மக்களுக்கான ஜனநாயகமானது இது பற்றி முடிவு எடுப்பது கட்சி என வீரபாண்டியன் தெரிவித்தார். கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் திங்கள்கிழமை செய்தியாளர்களுடன் பேசியதாவது: தவெக அரசு குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அமைப்பை அரசு உருவாக்க வேண்டும். கோவை மாவட்டத்தின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் பில்லூர், சிறுவாணி அணைகளை தூர்வார வேண்டும். ஆனைமலை நல்லாறு திட்டத்தை செயல்படுத்துவதிலும் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.கோவை, மதுரை மாநகரங்களுக்கு மெட்ரோகோவை மாநகராட்சி சாலைகள் தரமற்ற நிலையில் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. எனவே, சாலைகளை தரமாக அமைப்பதுடன், போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை, மதுரை ஆகிய மாநகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வர வேண்டும்.மாநில தலைநகர்களில் போராட்டம்மூடப்பட்டுள்ள 7 என்டிசி ஆலைகளையும் மீண்டும் திறந்து இயக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை, போனஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். நாட்டில் அத்தியாவசிய பொருள்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விலைவாசி உயர்வை கண்டித்து வரும் 10-ம் தேதி மாநில தலைநகர்களில் போராட்டம் நடத்தப்படும். உரிய நடவடிக்கை வேண்டும்மேலும், பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதுதொடர்பாக தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு செவிசாய்க்க வேண்டும்மேலும், அரசை விமர்சனம் செய்யக்கூடாது என்ற கருத்து ஏற்புடையதல்ல. கருத்து சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையாகும். அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை அச்சுறுத்தவோ, கைது நடவடிக்கைகள் மூலம் பழிவாங்கவோ கூடாது. இடதுசாரிகளின் விமர்சனங்கள், கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும். மத்திய அரசை போல அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. சட்டப்படியும், ஜனநாயக முறைப்படியும் நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.ஆதரவை வாபஸ் பெறுவது எப்படி ஜனநாயகமாகும்?ஆறு மாதத்தில் ஆதரவை வாபஸ் பெறுவது எப்படி ஜனநாயகம் ஆகும். நாங்கள் ஆதரவு மக்களுக்கான ஜனநாயகமானது இது பற்றி முடிவு எடுப்பது கட்சி.மத நம்பிக்கைகளை திணிக்கக்கூடாதுதிருச்சியில் மார்ச் 23-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா எந்த சூழ்நிலையிலும் மதச்சார்பின்மையை கைவிடக்கூடாது. இஸ்லாமியர்கள் நமது சொந்த சகோதரர்கள். எந்த மதத்தினரின் மீதும் மத நம்பிக்கைகளை திணிக்கக்கூடாது. சிறுபான்மை மக்களின் உரிமைகளையும், நலன்களையும் அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் பாதுகாக்க வேண்டும்.நல்லாட்சி வழங்க வேண்டும் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்களை முன்வைப்பது வேறு, ஆட்சிக்கு எதிராக செயல்படுவது வேறு. மக்களுக்கு நல்லாட்சி வழங்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது மக்களுக்கு செய்யும் மரியாதையாகும். அதே நேரத்தில், அரசின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டிய கடமையும் எங்களுக்கு உள்ளது. தவெக செல்வந்தர்களுக்கு ஆதரவாக உள்ளதுதவெக அரசின் நிர்வாக திறன் சரியில்லை. செல்வந்தர்களுக்கு ஆதரவாக உள்ளனர். தவெக நிர்வாகத்தின் செயல்திறன் மேம்பட வேண்டும். செல்வந்தர்களுக்கு ஆதரவான அணுகுமுறை இருக்கக்கூடாது.தொழிலாளர்களுக்கு என்ன பயன்?வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்த விவரங்கள் நாட்டு மக்களுக்கு தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும். அந்த முதலீடுகளால் தொழிலாளர்களுக்கு என்ன பயன் கிடைக்கும் என்பதையும் அரசு விளக்க வேண்டும். அரசியல் நிலைப்பாடுகள் குறித்து உரிய நேரத்தில் கட்சியின் அமைப்புகள் கூடி ஜனநாயக முறையில் முடிவெடுக்கும். திருச்சிக்கு வந்து பார்க்க வேண்டும்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு எங்களது நிலைப்பாடு தெரிவிக்கப்படும். மதுராந்தகம் தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்தது உண்மைதான். கம்யூனிஸ்ட் கட்சி எங்கு இருக்கிறது என்று கேட்பவர்கள் திருச்சிக்கு வந்து பார்க்க வேண்டும். தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து ஏன்?தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது திமுக கூட்டணியில் வெற்றி பெற்றோம். ஆளுநர் ஆட்சி வர கூடாது என்பதால் தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து உள்ளோம். காதில் தேன் வந்து பாய்வது போல் உள்ளதுதமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமராக வருவது நல்லது என்ற கருத்து காதில் தேன் வந்து பாய்வது போல் இருக்கிறது. ஆனால், நாட்டின் மதச்சார்பின்மையும் ஜனநாயகமும் பாதுகாக்கப்பட வேண்டும். தவெகவும் மதச்சார்பின்மை கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும்.விமர்சிப்பவர்களை தேடிச் சென்று நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும்இளைஞர்கள் மற்றும் பெண்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்பாகவும், மத்திய அரசின் தலையீடுகளுக்கு எதிராகவும் எங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளோம். புதிய அரசு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கும் என நம்புகிறோம். அரசை விமர்சிப்பவர்களை தேடிச் சென்று நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.