பால் விலையை உயர்த்தப்போவதாக வெளிவந்த செய்திக்கு ஆவின் நிறுவனம் திங்கள்கிழமை (நவ. 2) மறுப்பு தெரிவித்துள்ளது.ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசை ஆவின் நிறுவனம் கேட்டுக் கொண்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தனர்.இதுகுறித்து ஆவின் நிறுவனம் அளித்த விளக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்த அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக நாளிதழில் வெளியான செய்தி தொடர்பாக, ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுவது:ஆவின் நிறுவனம் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தரமான பால் மற்றும் பால் பொருள்களை நியாயமான விலையில் தொடர்ந்து வழங்கி வருகிறது. பால் உற்பத்தியாளர்களின் நலன், பால் கொள்முதல் விலை மற்றும் நுகர்வோரின் நலன் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஆவின் செயல்பட்டு வருகிறது.பால் விலை உயர்வு தொடர்பாக நாளிதழ் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியான செய்தி தவறான செய்தி. எனவே பொதுமக்கள் இதுபோன்ற உறுதிப்படுத்தப்படாத செய்திகளை நம்ப வேண்டாம் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த திட்டமா..? Aavin has denied reports that it intends to increase milk prices, the company stated on Monday (Nov. 2).