2.11.1976: கோதுமை ஊழல் வழக்கு - கோர்ட்டில் கருணாநிதி ஆஜர்

Wait 5 sec.

சென்னை, நவ. 1 - முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மீது மத்திய புலனாய்வுத் துறையினர் தொடர்ந்துள்ள வழக்கு இன்று விசேஷ நீதிபதி எஸ். சாமிக்கண்ணு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டிருந்த கருணாநிதி இன்று கோர்ட்டில் ஆஜர் ஆனார். வழக்கு விசாரணை நவம்பர் 8ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.பஞ்சாப் மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமையை பகிரங்க மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்க இரண்டு நிறுவனங்களுக்கு சலுகை காட்டியதாகவும், சலுகை பெற்ற நிறுவனங்களிடமிருந்து லஞ்சம் பெற்றதாகவும் கருணாநிதி மீது மத்ய புலனாய்வுத் துறையினர் வழக்குப் போட்டுள்ளனர். இந்தியன் பீனல் கோடு 161வது பிரிவு (லஞ்சக் குற்றம்), 468வது பிரிவு (மோசடி செய்யும் தோக்கத்துடன் கள்ள தஸ்தாவேஜுவைப் பயன்படுத்தியது). 471வது பிரிவு (கள்ள அல்லது போலித்தனமான தஸ்தாவேஜை உண்மை தஸ்தாவேஜி என்று உபயோகப்படுத்தியது) மற்றும் லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் விதி 5 உட்பிரிவு (2), உட்பிரிவு (5) ஆகியவற்றின் கீழ் கருணாநிதி மீது மத்திய புலனாய்வுத் துறையினர் குற்றம் சாட்டி வழக்குத் தொடர்ந்துள்ளனர்.மத்திய புலனாய்வுத் துறையினரால் தொடரப்படும் பொருளாதார மோசடிக் குற்றங்களை விசாரிக்க விசேஷமாக நியமிக்கப்பட்ட நீதிபதி சாமிக்கண்ணு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று காலை ஆரம்பமானது. கருணாநிதி விசாரணை ஆரம்பமாவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னதாக சரியாக காலை 10 மணி 55 நிமிடத்திற்கு கோர்ட் விசாரணை மண்டபத்திற்குள் வந்து அமர்ந்து கொண்டார். அவருடன் முன்னாள் அமைச்சர்களான அன்பழகன், அன்பில் தர்மலிங்கம், மன்னை நாராயணசாமி, கே. ராஜாராம், கண்ணப்பன், ஒ.பி. ராமன் ஆகியோரும் வந்தனர். கோர்ட்டுக்கு வந்திருந்த இரு முன்னாள் அமைச்சர்களான எஸ். மாதவன், எஸ். ஜே.சாதிக் பாட்சா ஆகிய இருவரும் வழக்கறிஞர் உடையில் வந்து வழக்கறிஞர்களாக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தனர்.விசாரணை நடைபெற்ற விசேஷ நீதிபதி மண்டபத்தில் கூட்டம் நிறைத்திருந்தது. ...சர்க்கரை ஊழல் புகார் விசாரணை - சர்க்காரியா கமிஷன் முன்பு சர்க்கரை ஆலை அதிபர் சாட்சியம்சென்னை, நவ. 1 - சர்க்கரை ஆலைகளில் தேங்கிக் கிடந்த இருப்பை வெளி மார்க்கெட்டில் மொத்த விற்பனையாளர்களுக்கு விற்க அனுமதி அளிப்பதற்காக முன்னாள் முதல்மைச்சர் கருணாநிதி மூட்டைக்கு ரூ. 3 வீதம் கணக்கில் காட்டாமல் ரொக்கப் பணம் தர வேண்டும் என்று கேட்டதாக சர்க்கரை ஆலை அதிபர் பி. மருதப் பிள்ளை இன்று சென்னையில் சார்க்காரியா கமிஷன் முன் சாட்சியம் அளிக்கையில் கூறினார்.சர்க்கரை பேர ஊழல் குறித்து முன்னாள் முதல்வர் மீதும், இதர அமைச்சர்கள் மீதும் சாட்டப்பட்ட குற்றச்சாட்டு குறித்து நீதிபதி சர்க்காரியா இன்று சென்னையில் உள்ள "காஞ்சி"யில் விசாரணை நடத்தினார். சர்க்கரை ஆலை அதிபர் மருதைப் பிள்ளை சாட்சியம் அளித்தார்.எந்தெந்த சர்க்கரை ஆலைக்கு வெளி மார்க்கெட்டில் எந்த அளவுக்கு சர்க்கரை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது என்ற விவரத்தைப் பற்றி நீதிபதி சர்க்காரியா கேட்டபோது, உடனடியாகத் தம் கைவசம் இந்த விவரம் இல்லை என்றும், அவற்றைத் தயாரித்து ஒரு வாரத்திற்குள் தருவதாகவும் மருதைப் பிள்ளை கூறினார். வருகிற சனிக்கிழமையன்று இந்த விவரங்களைக் கொடுக்கவேண்டும் என்றும், மேற்கொண்டு அதன் பின் சாட்சி விசாரிக்கப்படுவார் என்றும் நீதிபதி சர்க்காரியா கூறினர். ...2.11.1976: Wheat scandal case - Karunanidhi appears in court1.11.1976: விரைவில் கலரில் டெலிவிஷன்