தீபாவளி பண்டிகைக்கு கடைகளில் வாங்கும் பலகாரங்கள் தரக் குறைவாக இருந்தால் புகார் அளிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் அத்தியாவசமானதாக விளங்கும் இனிப்பு மற்றும் கார உணவுப் பொருள்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய உணவு பாதுகாப்புத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவா்கள், தற்காலிக ஸ்வீட் ஸ்டால்கள் உட்பட அனைத்து இனிப்பு மற்றும் கார வகை தயாரிப்பாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள், உணவு பாதுகாப்புத் துறையில் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்ற பின்னரே பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.கட்டுப்பாடுகள்தீபாவளி பலகாரங்கள் தயாரிக்கும் பேக்கரி, ஸ்வீட் ஸ்டால்கள் உள்ளிட்டவைக்கு கட்டுப்பாடுகளை உணவுப் பாதுகாப்புத் துறை விதித்துள்ளது.ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரி பொருள்கள் தயாரிப்பதற்கான உரிமம் பெற்ற தரமான மூலப் பொருள்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருள்களை மக்களுக்கு வழங்க வேண்டும். உணவுத் தயாரிப்பில் தரம் குறித்து சந்தேகத்திற்கிடமாக உள்ள மூலப் பொருள்களையோ, அனுமதிக்கப்பட்ட செயற்கை நிறமிகளை அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாகவோ உபயோகிக்கக்கூடாது. ஒருமுறை பயன்படுத்தி ஆற வைத்த சமையல் எண்ணெய்யை மறுபடியும் சூடுபடுத்தி பயன்படுத்தக் கூடாது.எண்ணெய் கொதி நிலையில் இருக்கும்போது புதிய சமையல் எண்ணெய்யை அதனுடன் கலக்கக் கூடாது. ஸ்வீட்ஸ் பாக்ஸ்களை விற்பனை செய்யும் வணிகா்கள் அந்த பாக்ஸில் ஸ்வீட்ஸ் தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் உண்ணத் தகுந்த காலம் ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.உணவு பொருள்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.புகார் எண்கள்தீபாவளி பண்டிகைக்கு பலகாரங்கள் வாங்கும் மக்கள், உணவுப் பாதுகாப்புத் துறையில் உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.சுகாதாரமான நல்லமுறையில் தயாரிக்கப்பட்ட உணவு பொருள்களை மட்டுமே பொதுமக்கள் வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.ஸ்வீட் பாக்ஸில் ஸ்வீட்ஸ் தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் உண்ணத் தகுந்த காலம் ஆகியவற்றை தவறாமல் பார்த்து வாங்க வேண்டும்.தரம் மற்றும் குறைபாடுகள் குறித்து மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையா் அலுவலக வாட்ஸ்ஆப் எண்ணுக்கு 94440 – 42322 புகார் அளிக்கலாம்.மேலிம், foodsafety.tn.gov.in என்ற இணையதளம் அல்லது TN Food Safety Consumer App என்ற செயலி மூலமும் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.Are the sweets/snacks you bought for Diwali of poor quality? Complaint numbers announced!கடை வீதிகளில் களைகட்டிய தீபாவளி விற்பனை! அலைமோதிய மக்கள் கூட்டத்தால் நெரிசல்!