ஹிப்ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு - 2 படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி, இசையமைத்து நாயகனாக நடித்து 2017 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ’மீசைய முறுக்கு’. அந்தப் படத்தைத் தொடர்ந்தே, அடுத்தடுத்து பல படங்களில் ஆதி நாயகனாக நடித்து வருகிறார்.தற்போது, நடிகை குஷ்புவின் அவ்னி மூவீஸ் தயாரிப்பில் மீசைய முறுக்கு படத்தின் இரண்டாவது பாகமான மீசைய முறுக்கு - 2 படத்தை ஆதி இயக்கி, நடித்து, இசையமைத்துள்ளார். இதில், இடம்பெற்ற ஆரா 10/10 ஆகிய பாடல் பெரிய ஹிட் அடித்தது.கடந்த செப். 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், ரூ. 51 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியது.மேலும் இந்தப் படத்தில் கேத்திகா ஷர்மா, சைத்ரா ஆச்சர், ரம்யா ரங்கநாதன், பாபா பாஸ்கர் மாஸ்டர், கருணாஸ், யோகிபாபு, நாசர், பகவதி, விஜய் வரதராஜ், யூடியூபர் ஹர்ஷத் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இசைத்துறையில் நிலவும் புறக்கணிப்புகளை எதிர்த்து, பாரம்பரிய கானா இசைக்கு உலகளாவிய அங்கீகாரம் தேடி மூன்று தலைமுறை இசைக்கலைஞர்கள் நடத்தும் போராட்டத்தை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், மீசைய முறுக்கு - 2 படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வரும் நவ. 6 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.The OTT release date for Hiphop Adhi's Meesaya Murukku 2 has been officially announced.நாய் சேகர் இயக்குநரின் கோயம்பத்தூர் மாப்பிள்ளை: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!