சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான முரசு புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நெல்லூர் மற்றும் நரசாப்பூர் இடையே, ஒங்கோலுக்கு தெற்கே தீவிர புயலாக இன்று (நவ. 3) அதிகாலை கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன் தாக்கத்தால், கடலோர மாவட்டங்களில் இன்று (நவ. 3) பெய்து வருகிறது. மழை காரணமாக, கடலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு (பகல் 1 மணி வரை) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.Weather forecast : Chance of rain in Chennai and 10 districts until 1 PM!மணிக்கு 120 கி.மீ. வேகம்... தீவிர புயலாக கரையைக் கடந்த முரசு!