இன்னும் தொடங்காத சீன் டிக்கெட் முன்பதிவு! ஏன்?

Wait 5 sec.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான சீன் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகத் தாமதமாகி வருகிறது. நடிகர்கள் சூர்யா, நஸ்ரியா, நஸ்லன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான சீன் திரைப்படம் நவ. 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் சீன் நன்றாக இருந்தால் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.ஆனால், இன்னும் டிக்கெட் முன்பதிவுக்கான இணையத் தளங்களில் சீன் திரைப்படத்திற்கான விற்பனை ஆரம்பமாகவில்லை. காரணம், தமிழக அரசு மீண்டும் அதிகாலை 6 மணிக் காட்சிகளை நடத்தத் திட்டமிட்டு வருகிறார்களாம். அது உறுதியானால் திரையரங்க உரிமையாளர்கள் சீன் முதல் நாள் முதல் காட்சியைத் தமிழகத்தில் 6 மணிக்கு தொடங்குவார்கள். இந்தக் காத்திருப்பால்தான் சீன் திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகளில் தாமதம் ஏற்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகை நயன்தாரா நடிப்பில் உருவான மூக்குத்தி அம்மன் - 2 திரைப்படத்திற்கு முன்பதிவுகள் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மைசா திரைப்படத்தின் தமிழ்ப் பாடல்! Ticket bookings for the film scene, starring actor Suriya, are being delayed.