அடுத்தடுத்து புயல்கள்! முதல்வர் விஜய்யிடம் உதவி கோரிய சந்திரபாபு நாயுடு!

Wait 5 sec.

புயல் நிவாரணப் பணிகளுக்காக தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யிடம் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு உதவி கோரியுள்ளார்.வங்கக் கடலில் உருவான ‘அர்னாப்’ புயல், மிகத் தீவிர புயலாக வலுவடைந்து, ஆந்திர மாநிலம் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினத்துக்கு இடையே உள்ள ஏனாம் (புதுச்சேரி நிர்வாகத்துக்கு உள்பட்ட பகுதி) அருகே கடந்த புதன்கிழமை கரையைக் கடந்தது.இந்த புயல் கரையைக் கடக்கும் போது, விநாடிக்கு 135 கி.மீ. வேகம் வரை காற்று வீசியதால் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன.இந்த நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளைத் தொடங்குவதற்குள், வங்கக் கடலில் அடுத்த புயல் உருவாகியுள்ளது.தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ள ‘முரசு’, இன்று நள்ளிரவில் ஆந்திரத்தின் நெல்லூருக்கும் நர்சாபுரத்திற்கும் இடையே, ஒங்கோலுக்குத் தெற்கே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்க்கு ஞாயிற்றுக்கிழமை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மீட்புப் பணிகளுக்கான உதவிகளைக் கோரியுள்ளார்.இதுதொடர்பாக ஆந்திரப் பிரதேச முதல்வர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் பதிவில், “புயல் பாதிப்புச் சூழலில், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, மின் கட்டமைப்புகளைச் சீரமைக்கத் தமிழக அரசின் உதவியைக் கோரினார்.புயலால் ஏராளமான மின் கம்பங்கள் சேதமடைந்துள்ள நிலையில், அவற்றைச் சீரமைப்பதற்கான பணியாளர்களையும் இயந்திரங்களையும் அனுப்பி வைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். இதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் சாதகமான பதிலை அளித்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.తుఫాను నేపథ్యంలో విద్యుత్ వ్యవస్థల పునరుద్ధరణకు తమిళనాడు ప్రభుత్వ సహాయం కోరుతూ తమిళనాడు ముఖ్యమంత్రి శ్రీ విజయ్ కు ముఖ్యమంత్రి శ్రీ నారా చంద్రబాబు నాయుడు నేడు ఫోన్ చేశారు. మురసు తుఫాను వల్ల పెద్ద ఎత్తున విద్యుత్ పోల్స్ దెబ్బ తింటాయని, పునరుద్ధరణకు సిబ్బందిని, యంత్రాలను పంపాలని…— CMO Andhra Pradesh (@AndhraPradeshCM) November 1, 2026இதனிடையே, ஆந்திரப் பிரதேசத்துக்கு தேவையான உதவிகளைச் செய்யவும், மின் கட்டமைப்பை சீரமைக்க ஊழியர்களை அனுப்பவும் தமிழ்நாடு மின்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.cyclone damages - Chandrababu Naidu seeks assistance from Chief Minister Vijay!முரசு புயல் எச்சரிக்கை! சென்னையில் கடல் சீற்றம்; அலைகள் 2.1 மீ. உயரம் எழும்!