நிதி மோசடி! தொழிலதிபர் பிரேம்குமார் மீது அமலாக்கத்துறை வழக்கு!

Wait 5 sec.

நிதி மோசடி வழக்கில் கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் பிரேம்குமார் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர், பிரேம்குமார். இவர் முதியோர், ஓய்வூதியர்களுக்கு அதிக வட்டி தருவதாகக் கூறி, 2006-ல் பாரத் லஜ்னா மல்டி-ஸ்டேட் (பிஎல்எம்) ஹௌசிங் கோ-ஆபரேட்டிவ் சொசைட்டி என்ற நிறுவனத்தை சென்னையில் நிறுவினார். இந்த நிறுவனத்தின் மூலம் பல கோடி ரூபாயும் திரட்டினர்.இருப்பினும், முதிர்வுக் காலம் முடிவடைந்த பின்னரும் மக்களுக்கு உரிய பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றுவதாக பிஎல்எம் நிறுவனத்தின் மீது புகார்கள் வந்தன. இதனிடையே, மக்களின் கோடிக்கணக்கான பணத்தை கூட்டுறவு சங்க விதிகளுக்குப் புறம்பாக, தன்னுடைய சொந்த வங்கிக் கணக்குகளிலும் குடும்பத்தினர் பெயர்களிலும் மற்றும் பிற தனியார் தொழில் நிறுவனங்களிலும் முறைகேடாக பயன்படுத்தியதாக பிரேம்குமார் மீது புலனாய்வு அமைப்புகள் குற்றம் சாட்டின.இந்த நிதி மோசடி வழக்கு தொடர்பாக, சென்னையில் பிரேம்குமாரை கேரள மாநில குற்றப்பிரிவு காவல்துறையின் பொருளாதாரக் குற்றப் பிரிவு அதிகாரிகள் கடந்த வாரம் கைது செய்தனர்.இந்த நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக பிரேம்குமாருக்கு எதிராக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.Financial fraud - Enforcement Directorate registers case against businessman Premkumarமக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வி