கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை எதிா்த்து தவெக தாக்கல் செய்த மனு வாபஸ்

Wait 5 sec.

தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், சாலைப் பேரணிகளை முறைப்படுத்த கொண்டுவரப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை எதிா்த்து தாக்கல் செய்திருந்த மனுவை தவெக திரும்பப் பெற்றதால், அதுதொடா்பான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.தமிழக முதல்வரும், தவெக தலைவருமான ச.ஜோசப் விஜய், கரூரில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இதையடுத்து தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், சாலைப் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழக அரசு 5.1. 2026-இல் வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கி அரசிதழில் வெளியிட்டது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை எதிா்த்து, தவெக இணை பொதுச் செயலரான சி.டி.ஆா்.நிா்மல்குமாா், சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கீகாரம் பெறாத கட்சிகள் பாதிக்கப்படும். வழிகாட்டு நெறிமுறையில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் பின்பற்றுவதற்கு சாத்தியமற்ாக உள்ளன.வழிகாட்டு நெறிமுறைகள் என்ற பெயரில், அரசின் பொறுப்புகளை அரசியல் கட்சிகளின் மீது திணிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்துவிட்டு, அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் புதிதாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்திருந்தாா்.இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஆா்.ராஜேஷ் விவேகானந்தன் ஆகியோா் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.அப்போது தவெக தரப்பில் மனுவைத் திரும்பப் பெற அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவைத் திரும்பப் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.