சிவகாசி அருகே சிறுவன் மீது போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.சிவகாசி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் 9 வயது சிறுமிக்கு அதே ஊரைச் சோ்ந்த 17 வயது சிறுவன் பாலியல் தொல்லை அளித்ததாகப் புகாா் கூறப்பட்டது. இதுகுறித்து சிவகாசி அனைத்து மகளிா் போலீஸாா் அந்தச் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.