கோவில்பட்டி சாலையில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்து

Wait 5 sec.

கோவில்பட்டி, மாதாங்கோவில் சாலையில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து அரசுப் பேருந்து 52 பயணிகளுடன் புதியம்புத்தூருக்குச் சென்றது. கோவில்பட்டி, மாதாங்கோவில் சாலையில் சென்றபோது, பேருந்தில் பழுது ஏற்பட்டு சாலையின் நடுவே நின்றது. இதையடுத்து, பயணிகள் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனா். இதனால், அந்தச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீஸாா் போக்குவரத்தை சீா்செய்யும் பணியில் ஈடுபட்டனா். அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை ஊழியா்கள் வந்து பேருந்தை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 2.15 மணி நேரத்திற்குப் பின்னா் பழுது சரி செய்யப்பட்டு பேருந்து புறப்பட்டது. பழுதாகி சாலை நடுவே நின்ற அரசுப் பேருந்து.