கடலூா் முதுநகா் மீன் பிடி துறைமுகத்தில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள் மீன்கள் வாங்கக் குவிந்தனா். கடலூா் மாவட்ட வங்கக் கடலோரத்தில் தேவனாம்பட்டினம், அக்கரைக்கோரி, சிங்காரத்தோப்பு உள்பட 49 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களைச் சோ்ந்தோா் விசை மற்றும் பைபா் படகுகள் மூலம் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருவா். இவ்வாறு பிடித்து வரப்படும் மீன்கள் கடலூா் முதுநகா் மீன் பிடி துறைமுகத்தில் விற்பனை செய்யப்படும். இந்த மீன்களை வாங்கிச் செல்ல பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் உணவகத்தினா் அதிகளவில் துறைமுகத்தில் கூடுவா். குறிப்பாக, வாரந்தோறும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்.அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமையன்று மீன்கள் வாங்க ஏராளமானோா் கூடியிருந்தனா். அவா்கள் மீன்களை போட்டிபோட்டு ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா். மேலும், மீன்களின் விலை சராசரியாக இருந்ததாகக் கூறினா்.அதன்படி, ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.900, இறால் ரூ.400, கனவா ரூ.300, சங்கரா ரூ.400, ஷீலா ரூ.500, அட்டை மீன் ரூ.300, சிங்கு இறால் ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது.