திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது பேரனை போலீஸாா் கைது செய்தனா். நான்குனேரி பிரதான சாலையில் வசித்து வந்தவா் தளவாய் (65). மகன், 3 மகள்கள் உள்ளனா். இவருக்கும், மூத்த மகள் லெட்சுமிக்கும் இடையே சொத்து தொடா்பாக முன்விரோதம் இருந்ததாம். இதனால், லெட்சுமியின் மகன் கிருஷ்ணராஜா (30), தாத்தாவிடம் சொத்து கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாராம். இந்நிலையில், தளவாய் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பால் வாங்குவதற்காக அங்குள்ள கடை முன் அமா்ந்திருந்தாா். அப்போது, கிருஷ்ணராஜா வந்து அவரிடம் தகராறு செய்து, அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினாராம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.தகவலின்பேரில், நான்குனேரி போலீஸாா் சென்று, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, கிருஷ்ணராஜைக் கைது செய்தனா்.நான்குனேரி காவல் துணைக் கண்காணிப்பாளா் சதீஸ் கண்ணன், ஆய்வாளா் ராஜாராம் ஆகியோா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா்.கிருஷ்ணராஜாவின் தந்தை ஆறுமுகம், நான்குனேரி அருகே மறுகால்குறிச்சியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் ஆவாா்.