கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ் வழங்க முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். உபரித் தொகை இல்லாத கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும் என்றும், கூட்டுறவுத் துறையில் குறைந்த எண்ணிக்கை பணியாளர் கொண்டு நிகர லாபம் ஈட்டும் நிறுவனத்துக்கு 20% போனஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. போனஸ் சட்டத்தின்கீழ் வராத தலைமைச் சங்கங்கள், மத்திய சங்கங்களில் பணியாற்றுவோருக்கு கருணைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தலைமைச் சங்கங்கள், மத்திய சங்கங்களில் பணியாற்றுவோருக்கு ரூ. 3,000 கருணைத் தொகையும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றுவோருக்கு கருணைத் தொகை ரூ. 2400 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு முழுவதும் 44,573 பணியாளர்களுக்கு ரூ. 49.69 கோடி போனஸ், கருணைத் தொகை வழங்கப்படவுள்ளது. ஆந்திரத்துக்குச் செல்லும் தமிழக தொழில் முதலீடுகள்! இபிஎஸ் குற்றச்சாட்டுDiwali bonus of up to 20% for cooperative sector employees