வானிலை நிலவரம்: இரவு 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழை!

Wait 5 sec.

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது:தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்துக்கு (இரவு 10 மணி வரை) காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, ஈரோடு, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தீபாவளியன்று மழை பெய்யுமா? வெளியான புதிய தகவல்!Weather update Rain in 10 districts until 10 PM