மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் மற்றும் டி-சீரிஸ் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம்.படத்தின் பூஜையில் திரையுலகைச் சேர்ந்த பல முக்கியப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.விழாவில் மெகாஸ்டார் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.ராம் சரணை இதுவரை பார்த்திராத வித்தியாசமான தோற்றத்தில் திரையில் காட்டவுள்ளார் இயக்குநர் சுகுமார். நவீன் யெர்னேனி, ஒய். ரவிசங்கர், விஜய பிரசாத் பண்ட்ரெட்டி மற்றும் பூஷன் குமார் ஆகியோர் பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். பான் இந்தியா அளவில் மிகப்பெரிய பொழுதுபோக்குத் திரைப்படமாக இதனை உருவாக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.