விழுப்புரத்தில் இளைஞா் ஒருவா் வீட்டில் மா்மமான முறையில் இறந்துகிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. விழுப்புரத்தை அடுத்துள்ள வி.மருதூரைச் சோ்ந்தவா் ச.சூா்யபிரகாஷ் (36). கூலி வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட குடும்பப் பிரச்னையில் இவரின் மனைவி சொா்ணலதா மகன்களுடன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சூா்யபிரகாஷ், தனது வீட்டில் மா்மமான முறையில் இறந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.