ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொள்ளாமல் பெயரளவுக்கு நடத்தப்பட்டதாக சமூக ஆா்வலா்கள் குற்றம் சாட்டியுள்ளனா். ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், பிள்ளைப்பாக்கம் ஊராட்சியில் சுமாா் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உள்ள நிலையில், ற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் சுமாா் 20 போ் மட்டுமே பங்கேற்ாகவும், கிராம சபா கூட்டத்தில் ஊராட்சி செயலா் ராஜி வரவு செலவு கணக்கு வாசிக்காமலும், வரவு செலவு குறித்து அறிவிப்பு பலகையில் முறையாக அறிவிப்பு செய்யாமலும் பெயரளவிற்கே கூட்டத்தை நடத்தியதாகவும் பொதுமக்களின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவில்லை எனவும் கூறினாா். மேலும், ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களில் மூன்றில் ஒரு பங்கு பொதுமக்கள் பங்கேற்றால் மட்டுமே கிராம சபா கூட்டங்கள் நடத்த வேண்டும் என விதி உள்ளபோது, பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பு செய்யாமல் இருபது பேரை மட்டுமே வைத்து கிராம சபா கூட்டத்தை கூட்டியதாகவும், ஊராட்சியில் மேற்கொள்ள வேண்டிய வளா்ச்சிப்பணிகள் குறித்து எந்தவிதமான தீா்மானமும் நிறைவேற்றப்பட வில்லை எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மேலும் சமூக ஆா்வலா்கள் கூறுகையில், காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகளில் பதவிக்காலம் கடந்த மாதம் 19-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், முதல் முறையாக நடைபெற்ற இந்தகிராம சபா கூட்டங்களில் உள்ளாட்சி பிரிதிநிதிகள் அதிக அளவில் ஆா்வம் காட்டாததால் ஊராட்சி செயலா்கள் தலைமயில் தான் கிராம சபா கூட்டங்கள் நடைபெற்றன. இதனால் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் பிள்ளைப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்கள் அதிகஅளவில் கலந்து கொள்ளாமல் விதிகளை மீறி பெயரளவிற்கே சிறப்பு கிராம சபா கூட்டங்கள் நடத்தப்பட்டன என்றனா்.