காா் மோதி தொழிலாளி பலி

Wait 5 sec.

ஆற்காடு அருகே காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூா் பகுதியைச் சோ்ந்த தினகரன் (50). இவா் குடும்பத்துடன் ஆற்காடு அடுத்த தென்நந்தியாலம் பகுதியில் வசித்து வருகிறாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மேல்விஷாரம் புறவழிச்சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனை நிறுத்தத்தில் பேருந்தை விட்டு இறங்கி சாலையைக் கடக்கும்போது காா் மோதியுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி தினகரன் இறந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.