கோவை - பெருந்துறை சாலையில் முதல்வர் விஜய் சாலைவலம்!

Wait 5 sec.

கோவை விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக பெருந்துறைக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் புறப்பட்டார்.ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த காஞ்சிக்கோவில் பிரிவு அருகேயுள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணா திருமண மண்டபத்தில் அரசுத் திட்டங்களை முதல்வர் விஜய் இன்று தொடக்கி வைக்கவுள்ளார்.இதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு இன்று காலை வருகை தந்த முதல்வர், சாலை வழியாக பெருந்துறைக்கு புறப்பட்டுள்ளார்.தேசிய நெடுஞ்சாலையில் அவினாசி, பெருமாநல்லூர், விஜயமங்கலம் சென்று, சுங்கச் சாவடி, சிப்காட் நுழைவாயில், பெருந்துறை புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், குன்னத்தூா் நான்கு சாலை, அண்ணா சிலை வழியாக விழா நடைபெறும் மண்டபத்துக்கு முதல்வா் செல்கிறாா்.பெருந்துறை, விஜயமங்கலம் சுங்கச்சாவடி முதல் விழா நடைபெறும் இடம் வரை சாலையின் இருபுறமும் பொதுமக்கள் முதல்வரை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த விழாவில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனுதவி உள்பட ரூ. 1,100 கோடியில் சுமாா் 5 ஆயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்க உள்ளாா். மேலும், ஈரோடு மாவட்டத்தில் முடிவுற்ற பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளையும் அவா் தொடங்கிவைக்கிறாா்.Chief Minister Vijay set off from Coimbatore to Perundurai by road!முதல்வா் இன்று பெருந்துறை வருகை: ரூ.1,100 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா்