ஜம்மு-காஷ்மீரில் மசூதி மீது கல்வீசியதாக 4 பேரைக் கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரின் ஷெர்பாக் பகுதியில் உள்ள பெஹ்ரூ என்ற இடத்தில் அமைந்த மசூதியில் சிலர் ஞாயிற்றுக்கிழமை மாலை தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சமூக விரோதிகள் சிலர் மசூதி மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக 4 பேரைக் கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவத்திற்கு மதச்சாயம் பூச வேண்டாம் என்றும் சரிபார்க்கப்படாத தகவல்களைப் பகிர வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அதிகாரிகள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.இதுகுறித்து திங்கள்கிழமை அதிகாரி ஒருவர் கூறுகையில், "வழிபாட்டுத் தலமாக மாற்றப்பட்ட ஒரு வீட்டில் தொழுகை நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. மாலை தொழுகையின் போது சில சமூக விரோதிகள் கல்வீசியதில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டது. காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்" என்று தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. Police have detained four persons for allegedly vandalising a mosque in Jammu and Kashmir's Anantnag district, with officials cautioning against giving a "communal colour to the incident" and advising people not to share unverified information.அன்பில் மகேஸுக்கு நவ. 4 வரை போலீஸ் காவல்