எலான் மஸ்க் குறித்து நடிகர் ரன்பீர் கபூர் பேசியது வைரலாகி வருகிறது. இயக்குநர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் நடிகர்கள் ரன்பிர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமாக உருவாகியுள்ள ராமாயணா வருகிற நவ. 5 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது.இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இதன் டிக்கெட் முன்பதிவுகள் இந்திய அளவில் ஆரம்பமாகியது. ஆனால், ஹிந்தியிலேயே எதிர்பார்த்த வேகத்தில் முன்பதிவுகள் நடைபெறாமல் மந்தமாகவே இருப்பதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகர் ரன்பீர் கபூர், “எலான் மஸ்க் பறக்கும் கார்களைக் கண்டுபிடிப்பதற்கு 5000 ஆண்டுகள் முன்பே இந்தியா அதனைச் செய்துவிட்டது” என ராமாயணத்தில் ராவணன் பயன்படுத்திய புஷ்பக விமானத்தை குறிப்பிட்டு பேசியுள்ளார். ரன்பீரின் இக்கருத்தைச் சிலர் கிண்டலடிப்பதுடன் அந்த விடியோவை அதிகம் பகிர்ந்து வருவதால் விவாதமே எழுந்துள்ளது. இன்று டேர் டெவில் திரைப்பட பூஜை!Actor Ranbir Kapoor's remarks about Elon Musk are going viral.