கேரளத்தில், பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்கும் அலுவலகத்தில் இருந்த அதிகாரிக்கு இன்றைய நாள் இப்படிப்பட்ட ஒரு நாளாக இருக்கும் என்று தெரிந்திருக்காது.காரணம், அவரிடம் புதுப்பிக்க வந்த பாஸ்போர்ட்டில், விமான நிலையங்களின் ஸ்டாம்ப் முத்திரைகளுக்கு பதிலாக, வீட்டில் வரவு செலவு கணக்குகள், தொலைபேசி எண்கள் இருந்திருந்ததுதான்.ஏதோ ஒரு பக்கத்தில் மட்டுமல்ல, கிட்டத்தட்ட அனைத்துப் பக்கங்களும் இப்படியே நிரம்பியிருக்கிறதாம். ஒரு கையடக்க டைரி போல அந்த பாஸ்போர்ட்டை யாரோ பயன்படுத்தியிருந்திருக்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு அதன் முக்கியத்துவம் பெற்று தெரிந்திருக்காமல் இருக்கலாம்.புதுப்பிக்க வந்த பார்ஸ்போர்ட்டை பார்த்து அலுவலக அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர் என்று ஒரு எக்ஸ் பதிவு போடப்பட்டிருந்தது.The Passport Officer in Kerala was shocked after seeing a person's passport which came for renewal https://t.co/M6l18qpcy3— DK Sardana (@dksardana) November 3, 2026 இந்த விடியோவைப் பார்த்த பலரும், தங்களது வாழ்வில் நடந்த இதுபோன்ற சம்பவங்கள் மற்றும் செல்போன் வருவதற்கு முன்பு, அனைவரிடமும் இதுபோன்ற ஒரு குட்டி டைரி வைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது போன்றவற்றை பகிர்ந்து வருகிறார்கள்.