நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ள ஹார்திக் பாண்டியா குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்தத் தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. டி20 தொடர் நிறைவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நாளை (நவம்பர் 4) தொடங்குகிறது.இந்த நிலையில், காயத்திலிருந்து மீண்டு ஹார்திக் பாண்டியா அணிக்குத் திரும்பினால் அணியில் நிலவும் நம்பர் 7 மற்றும் நம்பர் 8 இடத்துக்கான பிரச்னைக்குத் தீர்வு வரும் என கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஹார்திக் பாண்டியா அணிக்கு வந்துவிட்டால், நம்பர் 7 மற்றும் நம்பர் 8 இடத்துக்கான பிரச்னைக்கு தீர்வு கிடைத்துவிடும். அவர் அணியில் இணைந்தால் பேட்டிங்கில் மிகவும் சமபலத்துடன் கூடிய அணியாக நாங்கள் மாறுவோம். ஹார்திக் பாண்டியா மிகவும் சிறந்த வீரர். அவரைப் போன்று வெகு சில வீரர்களால் மட்டுமே விளையாட முடியும். அவரால் ஆட்டத்தின் எந்த ஒரு பகுதியிலும் பந்துவீச முடியும். அவரது பேட்டிங்கும் அணிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்குப் பிறகு அவரால் கிரிக்கெட் விளையாட முடியாததது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஹார்திக் பாண்டியாவிடம் நாங்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். அவர் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடரில் இந்தியா ஏ அணியில் விளையாடுவதாக இருந்தது. ஆனால், அதற்கு முன்பாக அவருக்கு அசௌகரியம் ஏற்பட அந்தத் தொடரில் சேர்க்கப்படவில்லை. அவர் விரைவில் முழு உடல்தகுதியுடன் அணிக்குத் திரும்புவார் என நம்புகிறேன் என்றார்.இந்திய அணியில் வழக்கமாக ஹார்திக் பாண்டியா 6-வது அல்லது 7-வது வீரராக களமிறங்கி விளையாடக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.Indian team captain Shubman Gill has spoken about Hardik Pandya, who has withdrawn from the ODI series against New Zealand due to an injury.இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியிலிருந்து நியூசி. வீரர் டெவான் கான்வே விலகல்!