எஸ்ஐஆர் மூலம் நாட்டின் மொத்த வாக்காளர்களில் 15% பேர் நீக்கம்: ராகுல்

Wait 5 sec.

எஸ்ஐஆர் மூலம் நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்களில் 15% பேர் நீக்கப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று (நவ. 1) தெரிவித்தார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (எஸ்.ஐ.ஆர்.) நடவடிக்கையில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நாடு முழுவதும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனஇதைத் தொடர்ந்து, ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் எஸ்ஐஆர் நடவடிக்கையைக் கண்டித்தும் தில்லியில் இந்தியா கூட்டணி சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.நண்பகல் 12 மணியளவில் தில்லியின் மிண்டோ சாலை - கோனாட் பிளேஸ் சந்திப்பில் தொடங்கி ராம்லீலா திடல் வரை பேரணி நடைபெற்றது. ராம் லீலா திடலில் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக பிரமாண்ட மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒன்றாக மேடையில் தோன்றி மக்கள் முன்பு உரையாற்றினர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தின் மூலம் நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்களில் 15% பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணமான ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும். அவர் சிறைக்கு நிச்சயம் அனுப்பப்படுவார். ஜனநாயகத்தை அழிக்க விடமாட்டோம். வாக்குத் திருட்டு மூலம் ஜனநாயகத்தை சிதைக்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் எனக் குறிப்பிட்டார். ஞானேஷ் குமார் பதவி நீக்கம்: தில்லியில் இந்தியா கூட்டணி பேரணி!அ15% of the country's total voters removed through SIR: Rahul