தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஓம் படத்தின் மூன்றாவது பாடல் ப்ரோமோ வெளியானது. நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கும் 55 ஆவது படம் ஓம். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தை தனுஷின் வன்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.இப்படத்தில் நடிகர் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ரூதின் ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துளார். முன்னதாக இவரது இசையில் வெளியான ‘அலாக்கா லோவா’, ‘வீழா வீரா’ போன்ற பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனைத் தொடர்ந்து, மூன்றாவது பாடலான ‘செஞ்சுடரே’ நாளை வெளியாகவுள்ளது. ஸ்ரீலீலா இடம்பெற்றுள்ள இப்பாடலின் ப்ரோமோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.ஓம் திரைப்படம் நவ. 20 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.ரஜினியின் தர்மன் திரைப்படத்தின் அடுத்த அப்டேட்!Sreeleela as Roja in the film 'Om': Song promo released!