தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்?

Wait 5 sec.

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நல்லாரி கிரண்குமார் ரெட்டி நியமிக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.தமிழ்நாட்டில் தற்போதைய பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் பதவி வகித்து வருகிறார். இவர் கேரள மாநிலத்துக்கும் ஆளுநராக பொறுப்பேற்றுள்ளார்.இந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டின் ஆளுநராக ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் நல்லாரி கிரண்குமார் ரெட்டி நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக சமூக ஊடகங்கள் செய்திகள் வலம் வருகின்றன. இவர், ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசத்தின் பேரவைத் தலைவராகவும் கடைசி முதல்வராகவும் இருந்தார். 2023-ல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்த கிரண்குமார், தற்போது பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். அதுமட்டுமின்றி, முதல்வர் விஜய்க்கும் இவர் நெருக்கமானவர் எனக் கூறப்படுகிறது.இருப்பினும், தமிழ்நாடு ஆளுநராக இவர் நியமிக்கப்படுவது குறித்து அரசு தரப்பிலோ கிரண்குமார் ரெட்டியின் தரப்பிலிருந்தோ அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு முதல்வர் விஜய் வருகை தருகிறாரா?Andhra Pradesh Ex CM Kiran kumar reddy likely to appointed as Tamilnadu Governor