மறைந்த லெஜண்டரி பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் பயோபிக்கில் நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்கவிருப்பதாக தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளன. இந்தப் பயோபிக்கில் தொடக்கத்தில் நயன்தாரா, த்ரிஷா என பலர் பரிந்துரைக்கப்பட்டனர். பின்னர், ருக்மணி வசந்த் அல்லது சாய்பல்லவி என்ற நிலைக்கு வந்தது. இந்த நிலையில், ரஷ்மிகாவியன் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் இந்த பயோபிக்கை உருவாக்க இருக்கிறது. இதில் சாய் பல்லவி ராமாயணா படத்தின் இரண்டாம் பாகத்தின் கால்ஷீட் பிரச்னையால் பின்வாங்கியதாகக் கூறப்படுகிறது. மைசா என்ற படத்தின் சண்டைக் காட்சிகளின்போது ரஷ்மிகா மந்தனாவுக்கு தொடை மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் ஓய்வில் இருக்கிறார். ஜெர்ஸி படத்தை இயக்கிய கௌதம் தின்னனூரி இயக்கத்தில் இந்த பயோபிக் உருவாகவிருக்கிறது. இதனை ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் பன்னி வாஸ் இணைந்தும் தயாரிக்கவிருக்கிறார்கள். எம்.எஸ். சுப்புலட்சுமி 88 வயதில் காலமானார். இந்தியாவின் பாரத் ரத்னா விருது வென்ற முதல் பாடகி என்பதும் முதல்முறையாக ரமோன் மாக்சேசே விருது வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எம்.எஸ். சுப்புலட்சுமியின் பிறந்த நாளில் செப்.16ஆம் தேதி இந்தப் பயோப்பிக்கின் அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை, உறுதிப்படுத்தாத பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகிக்கொண்டேதான் இருக்குமென்பதும் தவிர்க்க முடியாதது. வெங்கட் பிரபு கதை, யுவன் இசை... ராஜாஸ் பிளேலிஸ்ட் முதல் பாடல் ரிலீஸ் தேதி! Is Rashmika Mandanna playing MS Subbulakshmi in biopic? Here's what we know