வெங்கட் பிரபு கதையில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் ராஜாஸ் பிளேலிஸ்ட் படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இசைஞானி இளையராஜாவின் அண்ணன் மகன் ஜெயன் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படத்தின் சமீபத்தில் வெளியாகியது. இப்படத்திற்கு வெங்கட் பிரபு கதை எழுத, யுவன் இசையமைக்கிறார்.எலிஃபேன்டைன் நிறுவனத்தின் சார்பில் ரமணன் பாலகங்காதரன் இப்படத்தை தயாரிக்க, குடும்பஸ்தன் படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜித் என் சுப்ரமணியன் இப்படத்திற்கு திரைக்கதை எழுதி, இயக்குநராக அறிமுகமாகிறார்.இயக்குநர் சுதா கொங்கரா கிரியேட்டிவ் தயாரிப்பாளராக களமிறங்கும் இப்படத்தின் பாடல்களை இயக்குநர் சுஜித், விக்னேஷ் ஸ்ரீகாந்த் மற்றும் நவயுகன் ஆகியோர் எழுதியுள்ளனர்.இந்தப் படத்தின் முதல் பாடல் வரும் ஆக.31ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. ஸ்ரீவட்சன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இளையராஜா குடும்பத்தின் 3 வாரிசுகளின் பங்களிப்பில் வெளியாகும் படம் என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.THE FIRST DOSE IS HERE. U1 Drugs loading… ❤️Nostalgia is about to hit different.The wait ends.U1 playlist begins. First Dose from August 31, 2026Producer: @Ramanan_BaCast: @Jaiyan_official @olickalsonaMusic: @thisisysrStory: @vp_offl pic.twitter.com/cLKb5P6Oza— Elephantine X (@Elephantinex) August 29, 2026அமோக வரவேற்பு: கவின் - நயன்தாராவின் ஹாய் படத்துக்கு கூடுதல் திரைகள், காட்சிகள்!Yuvan muiscal Raajas Playlist film first single release date