வேர்ல்பூல் நிறுவனத்தில் புதிதாக துணி துவைக்கும் இயந்திரம் (வாஷிங் மெஷின்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டீம் டெக்னாலஜி வசதியுடன் 60 டிகிரி செல்சியஸ் வரை தண்ணீரை சூடாக்கி அதன் பிறகு துணிகளைத் துவைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதனால் காய்ந்த கறைகள், எண்ணெய், மண், மை, காபி போன்ற கடும் கறைகளையும் எளிதில் நீக்க முடியும் என வேர்ல்பூல் கூறுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த வேர்ல்பூல் நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்திய சந்தையில் நம்பகத்தன்மையான இடத்தைப் பெற்றுள்ளன. தற்போது இந்திய ஆடைகளுக்கு ஏற்ப கடினமான கறைகளை அகற்றும் வகையில் ஸ்டீம் டெக்னாலஜி வசதியுடன் புதிய துணி துவைக்கும் இயந்திரத்தை தயாரித்துள்ளது.இதன்மூலம் இயந்திரத்தில் உள்ள தண்ணீரை 60 டிகிரி செல்சியஸ் வரை சூடாக்க முடியும். சுடு தண்ணீரில் துணிகளை துவைப்பதால் கடினமான கறைகளை எளிதில் நீக்க முடிகிறது. 100 வகையான கடினமான கறைகளையும் 99% நீக்க முடியும் என வேர்ல்பூல் நம்பிக்கை தெரிவித்துள்ளது.9 கிலோ மற்றும் 7 கிலோ என இருவேறு எடைகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்வெர்டர் மோட்டார் பொறுத்தப்பட்டுள்ளதால் குறைந்த அளவு மின்சாரத்தையே எடுத்துக்கொள்ளும். இதன் விலை ரூ. 26,790 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.42 மணி நேரம் நீடிக்கும் பேட்டரி! ஏசஸ் விவோபுக் 15 மடிக்கணினி அறிமுகம்!whirlpool steam wash technology Front Load Washing Machine