சேலத்தில் வீட்டின் தண்ணீர் தொட்டியில் பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு மூட்டை கட்டி வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சேலம் அரிசிபாளையம் குணபல ராமசாமி தெருவில் வாடகை வீட்டின் மொட்டை மாடியில் உள்ள சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியில் பெண் ஒருவரின் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, இரண்டு மூட்டைகளில் கட்டி வீசப்பட்ட நிலையில் உடல் மீட்கப்பட்டது.துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து வீட்டில் வசிக்கும் பூசாரி ரமேஷ் அளித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்தி வருகிறார்கள்.தண்ணீர் தொட்டிக்குள் ஏழு துண்டுகளாக பெண்ணின் உடலை வெட்டி அதை மூன்று மூட்டைகளாக கட்டி வீசப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.கொலை செய்யப்பட்ட பெண் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். Woman's body found in water tank! Sensation in Salem.