கொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு

Wait 5 sec.

கொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பிடித்த முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அளித்த விண்ணப்பத்தை ஏற்று, கொளத்தூர் தொகுதியில், 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஓட்டுக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன.அப்போது முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.முறைகேடுகள் நடந்துள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி. பேடுகளை சரி பார்க்க உத்தரவிட வேண்டும் என்றும், தவெக எம்.எல் ஏ - வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள் முருகன் முன்னிலையில், மூத்த வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் கடந்த வாரம் முறையிட்டார். முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கு வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்திருந்தனர்.இதையடுத்து இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று(திங்கள்கிழமை) தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. The verdict on M.K. Stalin's petition challenging V.S. Babu's victory in Kolathur has been reserved.தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் விஜய் அறிவிப்பு